தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சுசித்ரா. கோபிக்கு ராதிகாவுடன் காதல் இருந்துவரும் நிலையில் அவர் எப்போது வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பே இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் பாக்கியாவிடம் விவாகரத்து பெற அவருக்கே தெரியாமல் அவரை வேறு ஒரு காரணம் சொல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார் கோபி. அப்போதுகூட பாக்யாவுக்கு கோபி மேல சந்தேகம் வராமல் போனதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி இல்ல பேக்கு லட்சுமி எனவும் கலாய்த்து வந்தனர்.
இப்படி தொடர்ந்து பலரும் கலாய்க்க தொடங்கியதால் சுசித்ரா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் பரவ தொடங்கியது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்கையில் சுசித்ரா அது உண்மை இல்லை. தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பேன் என விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் பாக்கியா விலகுவதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
