Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் சுதா கொங்கரா மகளுக்கு திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய சூர்யா

Sudha Kongara ‘s Daughter’s engagement

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அது யார் வீட்டு திருமண விழா என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், அது இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண விழா என தெரியவந்துள்ளது. புதுவிதமான தோற்றத்தில் பாரம்பரிய உடையணிந்து இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, மணமக்களை வாழ்த்தினார்.