தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் எந்த வகையான மூலிகைகள் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் தலைவலி பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றன. தலைவலி வந்தாலே அன்றைய நாள் பெரும் சிக்கலாகவே இருக்கும். அதனை தடுக்க பலரும் தைலம் மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ஆனால் மூலிகையை பயன்படுத்தினால் நம் உடலுக்கு ஆரோக்கியமும் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.
வில்வ மரத்தின் இலை அல்லது பட்டையை கஷாயம் போட்டு குடித்து வரலாம். இது மட்டும் இல்லாமல் மருதாணி இலைகளை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் இலைகளை அகற்றி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் தலைவலிக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும்.
இது மட்டும் இல்லாமல் கற்றாழைச் சாறு குடித்து வந்தால் அதில் இருக்கும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. நெற்றியில் கற்றாழை ஜெல்லை தேய்த்து காயவிட்டு 20 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
எனவே ஆரோக்கியம் மற்ற முறையில் தலைவலியை சரி செய்யாமல் ஆரோக்கியமான முறையில் மூலிகைகளை பயன்படுத்தி தலைவலியை போக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.