சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடித்த தோனி கதாபத்திரம் யாராலும் மறக்க முடியாது.
அந்த அளவிற்கு தோனியாகவே வாழ்ந்து இருப்பார், இவர் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த நிகழ்வு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதற்கு பிரதமர் வரை இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தோனியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தன் இன்ஸ்டா பக்கத்தில் மிக கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டார்.
அதில் சுஷாந்த் கடந்த 2 வருடங்களாகவே மிகவும் மன கஷ்டத்தில் தான் காரணம், இந்த இண்டஸ்ட்ரி செய்த பாலிட்டிக்ஸ் தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்களும் மிக கடுமையாக பாலிவுட் இண்டஸ்ட்ரியை விமர்சித்து வருகின்றனர்.
சுஷாந்திற்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்தும் யாரும் உதவவில்லை என திட்டி வருகின்றனர்.