Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தற்கொலை எண்ணம் வருகிறது – மீரா மிதுன் டுவிட்

suicide ideation is coming - Meera Mithun Tweet

தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மன அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது. மன அழுத்தம் இருப்பதை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும் என்னை தொந்தரவு செய்வது நிறுத்தப்படவில்லை. எனக்கு மனநிம்மதி இல்லை. நான் இறந்தால் அதற்கு காரணமான அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.

3 வருடங்களுக்கும் மேலாக என்னை அவதூறு செய்கிறார்கள். அதனால்தான் சமூக வலைத்தளம் பக்கம் நான் வரவில்லை. வலைத்தளம் மூலம்தான் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். முழுமையாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். இந்த வலியை நிறுத்த விரும்புகிறேன். சாக விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Meera Mithun Tweet
Meera Mithun Tweet