தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நேற்று 5-வது சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.
பாலாஜி முருகதாஸ் அதிகமான வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில் குறைவான ஓட்டுகளோடு சுஜா வருணி மற்றும் அபிநய் ஆகியோர் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது சுஜா வருணி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த காட்சிகள் இன்று இரவு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.