கணவர் சிவகுமாரை ஷாப்பிங் கூட்டி சென்று பிராங்க் செய்துள்ளார் சுஜா வருணி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி தொடர்ந்து அவர் பல வருடங்களாக காதலித்து வந்த சிவாஜிகணேசனின் பேரனும் நடிகருமான சிவகுமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சுஜா வருணி தன்னுடைய கணவர் சிவகுமார் மற்றும் மகனுடன் சேர்ந்து சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். குறைந்த விலையில் கிச்சன் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள், குழந்தைக்கு விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் என அனைத்தையும் வாங்கி குவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய கணவரை பிராங்க் செய்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து ஷாப்பிங் செய்த இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.