தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி குமார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி, பொம்மலாட்டம், சித்தி, தலையணை பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார். பாண்டவர் இல்லம் சீரியலிலும் நடித்து வந்தார்.
திடீரென்று இவர் காசிக்கு போவதாக காட்சிகள் மாற்றப்பட்டு தற்போது வரை அவருடைய கதாபாத்திரத்தை பற்றி எந்த ஒரு நகர்வும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் டெல்லி குமார் அளித்த பேட்டி ஒன்றில் திரும்பவும் பாண்டவர் இல்லம் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் டாக்டர்கள் ஒரு வருடம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொன்னதால் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தேன். தற்போது வெகு விரைவில் சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் இடம் பெற உள்ளது.
ஆனால் காசிக்கு போயிட்டு வந்த நான் இதன்பிறகு எப்படி இருக்க போகிறேன்? என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரியவில்லை என கூறியுள்ளார்.
