தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குணசேகரனும் அவரது தம்பிகளும் கட்டி வந்த பொண்டாட்டியை வீட்டு வேலைக்காரிகள் போல நடத்துகின்றனர்.
இப்படி அந்த நிலையில் கடைசி தம்பி சக்தியின் மனைவியாக வந்த ஜனனி இந்த நிலையை மாற்ற போராடி வருகிறார். இப்படி நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 200 எபிசோடுகளை கடந்துள்ளது.
இதனை சீரியல் குழுவினர் கொண்டாடி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்கள் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாட்டு கூறி வருகின்றனர்.