தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகம் என்பதால் எல்லா சீரியல்களும் டிஆர்பி-யில் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகின்றனர்.
மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் மகராசி, தாலாட்டு போன்ற சீரியல்கள் தான் குறைந்த அளவிலான ரேட்டிங்கை பெற்று வருகிறது. அதை போல் இரவு நேரத்தை பொறுத்தவரை அன்பே வா சீரியல் கதையை இல்லாமல் சன் டிவி உருட்டி வரும் சீரியலாக இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியல் வெகு விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும் இந்த சீரியல் ரசிகர்கள் சிலர் ஏன் முடிவுக்கு கொண்டு வரீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.