தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களும் மக்களிடம் ஃபேவரைட்டாக இருந்துள்ளது.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் தென்றல் மற்றும் கோலங்கள் போன்றவை. இந்த இரண்டு சீரியல்களில் சன் டிவியில் வெற்றிநடை போட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.
ஆனால் இந்த முறை இந்த சீரியல்கள் சன் டிவியில் மறு ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.