Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் “டாப் குக் டூப்பு குக்”, கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சனிக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கியது.

பரத், மோனிஷா, ஜிபி முத்து என பல கோமாளிகள் இதில் பங்கேற்கவில்லை. நடுவர் வெங்கட் பட் அவர்களும் இந்த சீசனில் இருந்து வெளியேறி இருந்த நிலையில் தற்போது அவர் சன் டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மோனிஷா, பரத், ஜிபி முத்து, தீபா அக்கா, தீனா என இடம்பெற்றுள்ள அனைவரும் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவி ஷோவை இனி சன் டிவியில் பார்க்கலாம் என கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சிலர் இது விஜய் டிவியா? சன் டிவியா? எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sun TV show latest update viral
Sun TV show latest update viral