தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிங்க பெண்ணே. தொடங்கிய கொஞ்ச நாளிலேயே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் வில்லிகள் குரூப் ஆனந்தி ஏமாற்ற சதி வேலை செய்து வருகிறது.
அழகன் யார் என்ற உண்மை ஆனந்திக்கு தெரியுமா என்ற எதிர்பார்ப்போடு சீரியல் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஆனந்தியின் தோழியாக ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜிவி டிம்பிள் சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக விஜய் டிவி மாதுளம் காதலும் சீரியலில் நடித்து வரும் விஜே கல்யாணி நடிக்கப் போகிறார் எனவும் தெரியவந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் டெம்பிள் நாயகியாக நடிக்க இருப்பதன் காரணமாக இதிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
