தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பீஸ்ட். எதிர்பாராத அளவிற்கு மோசமான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படத்தை சன் டிவி நிறுவனம் தீபாவளி ஸ்பெஷல் திரைப்படம் ஆக வரும் அக்டோபர் 24ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தை பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் இந்திய சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என குறிப்பிட்டு ட்வீட் செய்ய இதனால் பலரும் கிண்டல் அடிக்க தொடங்கினர். ஒரு தோல்வி படத்திற்கு இப்படி ஒரு பில்டப் தேவையா என பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனால் கொஞ்ச நேரத்தில் சன் டிவி நிறுவனம் அந்த ட்வீட்டை நீக்கி உள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.