Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் கதைக்கு நோ சொன்னதால் சவால் விட்டு படம் எடுத்தேன்,ஆனால்?: சுந்தர் சி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் இவரை வைத்து ஒரே ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து இயக்குனர்களுக்கும் உண்டு.

இதற்காக விஜய் சந்தித்து பல இயக்குனர்கள் கதை கூறி வருகின்றனர். அப்படித்தான் இயக்குனர் சுந்தர் சி ஒரு கதையை கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது விஜயை சந்தித்து ஒரு கதையை சொல்ல விஜய்க்கு முதல் பாதி பிடித்திருக்க இரண்டாம் பாதி பிடிக்காமல் போக இந்த கதை வேண்டாம் என நிராகரித்துள்ளார். இதே கதையை வேறொரு நடிகரை வைத்து ஹிட் கொடுத்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்துள்ளார்.

அவர் சவால் விட்ட பிறகு ஒருவர் நடிகரை வைத்து படத்தை இயக்க கடைசியில் படம் பெரிய தோல்வியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன படம் என்பதை சொல்ல மாட்டேன். காரணம் ஓபனாக சொன்னால் அதில் நடித்த நடிகர் கவலைப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Sundar C latest speech Viral
Sundar C latest speech Viral