Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலாகலமாக நடந்த சுந்தரி சீரியல் கேப்ரில்லாவில் வளைகாப்பு..!

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவிற்கு வளைகாப்பு நடந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் கேப்ரில்லா. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.

இந்த சீரியல் முடியும் கட்டத்திலும் டிஆர்பியில் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சீரியல் முடிந்த கையோடு கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் அவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார்.

தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. வளைகாப்பு நடந்த போது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் கேப்ரில்லா வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதால் ரசிகர்கள் பலரும் கேபிரில்லாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.