Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரி சீரியல் அனுவுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம், புகைப்படத்தால் குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இது சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ கோபிகா.

தற்போது சுந்தரி சீரியல் இவரது கேரக்டர் இடம் பெறாத நிலையில் அன்பே வா சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் வைஷாக் ரவி என்ற நடிகருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் என ஸ்ரீ கோபிகா தெரிவித்துள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.