Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி சுனிதா.. ஹீரோ யார் தெரியுமா?

sunitha-in-new-movie update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுனிதா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது என சொல்லலாம்.

இந்த நிலையில் தற்போது இவர் வெள்ளித் திரையில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ நடிக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை சினிமாவில் சில படங்களில் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சந்தோஷ பிரதாப் தான்.

தற்போது இருவரும் சேர்ந்து நடித்திருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு சுனிதா இதனை தெரிவித்துள்ளார். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் டிரைலர் தான் பாக்கி படம் இன்னும் இருக்கு என தெரிவித்துள்ளார்.