பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் 2011 ஆம் ஆண்டில் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சன்னி லியோன் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஏற்கனவே ஒரு பாடலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பேய் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் சன்னி லியோன. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் சன்னிலியோனை அவரது நண்பர் நீச்சல் குளத்தில் தள்ளி விட்டுள்ளார். அதற்கு சன்னி லியோன் அவர் மீது தனது செருப்பை வீசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram