Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..

Sunny Leone photo on hall ticket

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த பெண் ஒருவர் தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், இது குறித்து தேர்வு குழுவினர் விசாரித்த போது அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததில் அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Sunny Leone photo on hall ticket
Sunny Leone photo on hall ticket