ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார். பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்த அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். 2014-ம் ஆண்டு வெளியான ‘வடகறி’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து ‘மதுர ராஜா’, ‘ஓ மை கோஸ்ட்’, ‘தீ இவன்’ ஆகிய படங்களில் சன்னி லியோன் நடித்தார். மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வரும் சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராகவும் மாறி இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு ‘சிக்கா லோகா’ என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார்.நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.