Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் குட் சுப்ரமணி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சூப்பர் குட் சுப்ரமணி காலமாகி உள்ளார்.

காமெடி மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நிலையில் ஆரம்பகாலத்தில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இவருக்கு சூப்பர் குட் என்று பெயருடன் சேர்ந்து கொண்டது.

பரியேறும் பெருமாள்,ஜெய் பீம், முண்டாசுப்பட்டி,பாமரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ் இருப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதை நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.