தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்து உள்ள நிலையில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக விஜய் டிவியை சேர்ந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் கிராமத்தில் இருந்து சில போட்டியாளர்களை அனுப்புவது வழக்கம். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு மாடர்னாக இருப்பவர்களின் உடைகள் நடவடிக்கைகள் பிடிக்காது.
இதனால் கிராமத்தில் இருப்பவர்கள் இதை விமர்சித்துப் பேச அதன் பிறகு அது சண்டையாக கன்டென்ட் கிடைக்கும் என்பதால் விஜய் டிவி தொடர்ந்து இந்த யுக்தியை கையாண்டு வருகிறது. போன சீசனில் தாமரைச்செல்வி பங்கேற்றது போல இந்த சீசனில் ராஜலட்சுமி பங்கேற்க வைக்க விஜய் டிவி திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.