Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்

super-singer-rajalakshmi-movie-poster

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஒலிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலர் தற்போது வெள்ளி திரையில் பின்னணி பாடகர்களாக பல பாடல்கள் பாடி பிரபலமாகியுள்ளனர்.

அதேபோல் இந்நிகழ்ச்சியில் கிராமிய பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்த செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் தற்போது வெள்ளி திரையில் பிரபல பின்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தற்போது இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கும் ‘லைசன்ஸ்’ என்னும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படகுழு வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்க நடிகர் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதோடு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

super-singer-rajalakshmi-movie-poster
super-singer-rajalakshmi-movie-poster