தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரின் ரசிகர் மன்ற அசோசியேஷன் தலைவராக பணியாற்றி வந்தவர் சுதாகர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் – வைரலாகும் பதிவு
தற்போது 71 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை குறைபாட்டுடன் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவரது மறைவு செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் சுதாகரின் மறைவு சோகத்தை அளிப்பதாக பதிவு செய்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். @SudhakarVM
— Rajinikanth (@rajinikanth) January 6, 2023