Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் அப்பா புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து திரை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்து பிறகு அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ‌ ‌

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் சூப்பர் ஸ்டாரின் அப்பாவா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Super star Rajinikanth father photo viral
Super star Rajinikanth father photo viral