Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் ஜெய்லர் படத்தின் கிளிம்ஸ் வீடியோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்

super star rajinikanth in jailer glimpse video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.