அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இணைந்திருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை பீஸ்ட் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதில் ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், கே எஸ் ரவிக்குமார், பிரியங்கா மோகன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.
Big buzz in #Superstar @rajinikanth ‘s @Nelsondilpkumar directed #Jailer @tamannaahspeaks plays the female lead! pic.twitter.com/HCzlgR4D0R
— Sreedhar Pillai (@sri50) August 13, 2022