Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் போட்ட பதிவு

super star rajinikanth-post-goes-viral

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

லால் சலாம் படம் உலகம் முழுவதும் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், \”என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.