Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டி பேசிய ரஜினிகாந்த். வைரலாகும் தகவல்

super star rajinikanth praised jigardhanda xx movie team

ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக” நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.

super star rajinikanth praised jigardhanda xx movie team
super star rajinikanth praised jigardhanda xx movie team