Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோல்டன் க்ளோப் விருது வென்ற கீரவாணி – ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்த ரஜினி.!!

super star rajinikanth tweet about rrr movie team

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் என்டிஆர் நடிப்பில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்ற RRR திரைப்படம் பல விருதுகளை குவித்து வருகிறது. தற்போது ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இப்படத்திற்கு கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு இந்த பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், இந்திய சினிமாவிற்கு கோல்டன் க்ளோப் விருதை கொண்டு வந்து பெருமை கொள்ள செய்ததற்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.