தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் புத்தாண்டு சமயத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் வெளியாக வாய்ப்பு குறைவு என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் இப்படம் மே மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.