இந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்காக படப்பிடிப்பு பணிகள் சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அதாவது நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வேட்டி ஜிப்பா உடன் மேக்கப் ஏதும் இல்லாமல் இயல்பான லுக்கோடு வந்திருந்தபோது ரசிகர்களுக்கு அப்படியே போஸ் கொடுத்திருக்கிறார். அப்புகைப்படத்தை எடுத்த ரசிகர்கள் இயல்பான மனிதர் ரஜினி என பாராட்டி புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
Latest pics of #Superstar @rajinikanth pic.twitter.com/K1SXqxB2jA
— Ramesh Bala (@rameshlaus) October 6, 2022