கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படங்கள் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வரும் நிலையில் ஜனவரி 1ஆம் தேதியான புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தத்துவம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில் என தத்துவம் நிறைந்த வாழ்த்துக்களை பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..#உன்வாழ்க்கை_உன்கையில்
— Rajinikanth (@rajinikanth) December 31, 2022