இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்க இருக்கும் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.