தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படம் வெளியாகி நாளையோடு 75 நாள் ஆகிறது. இதனை ரோகினி திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.
இப்படி படம் இவ்வளவு நாட்களாக வெற்றி நடைபோட்டு வந்தாலும் இன்னும் விநியோகிஸ்தர்கள் கணக்கை ஒப்படைக்கவில்லை என தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஒரு வெற்றி படத்திற்கு இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலையை என்ன சொல்வது? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்வது? நடிகர்கள், தயாரிப்பாளர்கள் OTT பக்கம் போறதில்ல எந்த தவறும் இல்லை என யோசிக்க தோன்றுகிறது என கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் பல வருடங்களுக்கு முன்னர் இதை கூறியுள்ளார் என அவர் பேசிய வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.