நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “சூர்யா 42” என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான பூஜை இன்று காலை சென்னை போரூர் அருகே உள்ள ராமபுரத்தில் உள்ள ‘அகரம்’ பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ‘திஷா பதானி’ நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மகத் நடிக்கிறார். இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவு படமான இப்படத்தை இவருடன் இணைந்து ஆதி நாராயணாவும் எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரபல பாடலாசிரியரான மதன் கார்கி வசனங்கள் எழுதி இருக்கிறார்.
மேலும் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக இன்று நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சில ரசிகர்கள் அல்லு அர்ஜுன், தல அஜித், கே.ஜி.எஃப் யாஷ், வெற்றிமாறன், அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வந்தது போல மீம்களை தயார் செய்து ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். இந்த மீம்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.