தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். மேலும் சூர்யா ஐந்து மாறுபட்ட வேடங்களில் நடிக்க உள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் கதை மற்றும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதை என இரண்டும் கலந்து கலவையாக இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் இலங்கையில் சூட்டிங் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
