சூர்யாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லையா என்பது குறித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் இவர் சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நீதிமன்றம் கொரானா காரணமாக காணொளி வாயிலாக விசாரணை நடத்துகிறது. ஆனால் நீட் தேர்வு எழுத மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத செல்ல வேண்டும் என கூறுகிறது.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்த கூடிய ஒன்று என தெரிவித்திருந்தார்.
இவருடைய இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகள் சிலர் சூர்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிலர் நடவடிக்கை தேவை இல்லை எனவும் கூறி வந்தனர்.
இப்படியான நிலையில் சென்னை ஐகோர்ட் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவை இல்லை. ஆனால் இனி ஒருமுறை நீதிமன்றம் பற்றியும் நீதிபதிகள் பற்றிப் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.
இந்த கொரானா பேரிடர் காலத்திலும் 42 ஆயிரத்து 233 வழக்குகளை முடித்து வைத்துள்ளோம் என தெரிவித்தது. மேலும் சூர்யாவின் சமூக சேவைகளை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது எனவும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சூர்யா தனக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதார ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020