தமிழ் சினிமாவில் தன் கமர்ஷியல் படங்களால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் ஹரி. இவரின் படங்கள் எப்போதும் ஜெட் வேகத்தில் போகும்.
அந்த வகையில் தற்போது இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இப்படம் தொடங்கும் சமயத்தில் தான் கொரொனா வந்து படப்பிடிப்பு நின்றது. கொரொனா பிரச்சனைகள் தீர்ந்ததும் இப்படம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரொனாவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட, இயக்குனர் ஹரி தன் சம்பளத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளார். இது பலரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.