தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இந்த படம் பல்வேறு விருதுகளை வென்றது.
மேலும் 68 வது தேசிய விருதுக்கான பட்டியலில் இந்த படத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த விருது விழாவில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் ஜோடியாக பங்கேற்று உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சில்லுனு ஒரு காதல் கௌதம் மற்றும் குந்தவி இருவரும் 68 வது தேசிய விருது விழாவில் சூரரை போற்று படத்திற்காக பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
Our Beloved #SillunuOruKaadhal Couple Gowtham & Kundavi at #SooraraiPottru 68th National Awards Ceremony! pic.twitter.com/m60HtbTg9P
— Studio Green (@StudioGreen2) September 30, 2022