Tamilstar
News Tamil News

விரைவில் சூர்யாவுக்கு ஜோடியாகும் மாளவிகா?

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் சென்சேஷன் என கூறிவிடலாம். பேட்ட படத்தில் சிறிய ரோலில் நடித்த இவர் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் இவர் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சூர்யாவின் படத்தில் நடிக்க மாளவிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

எது எப்படியோ மாளவிகா தான் இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக திகழ்வார் போல.