அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ என்ற OTT வழியாக வெளியாக உள்ளது.
சூரரைப் போற்று படம் லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் இந்த படத்தின் மூலமாக கிடைக்கும் தொகையில் ரூபாய் 5 கோடி நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன் மூலம் ரூபாய் 1.5 கோடி சினிமா சார்ந்த தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி யூனியன், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டவைகளுக்கு நிவாரணம் அளித்தார்.
ஒரு கோடி ரூபாய்க்கு சினிமா துறை சார்ந்த அமைப்புகளின் சாராத தொழிலாளர்களின் குடும்பத்தினர் பள்ளி மாணவர்களின் கல்விக்காக அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் வரை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கோடியில் மீதமுள்ள 2.5 கோடியை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பத்திலுள்ள ஒரு மாணவனின் கல்விச் செலவிற்கு அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் அகரம் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
கல்வி தொகையானது நேரடியாக மாணவர்களின் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Onam Ashamsakal to all!!
சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக சிறிய பங்களிப்பு…@agaramvisionhttps://t.co/ut8tOnzHgj#AgaramCovidEduFund pic.twitter.com/M1tREjN9SG
— Suriya Sivakumar (@Suriya_offl) August 31, 2020