Tamilstar
News Tamil News

ஆரம்பத்தில் இருந்து இதுவரை சூர்யா கடந்து வந்த பாதைகள் ! – பிறந்தநாள் ஸ்பெஷல்

1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகர் சூர்யா. சரவணன் என்ற இயற்பெயர் கொண்டவார் முன்னணி நடிகர் சூர்யா. இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர்.

இதன்பின் பிரபல நிறுவனம் ஒன்றில் மேனேஜர் ஆக பணிபுரிந்து வந்தார். ஆனால் அந்த துறையில் திருப்தி இல்லாத காரணத்தால் திரைத்துறையில் காலாடி எடுத்து வைத்தார் சூர்யா.

 

இவரின் முதல் படமே தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த நேருக்கு நேர். இந்த திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார்.

ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி 1998, சந்திப்போமா 1998, பெரியண்ணா 1999, பூவெல்லாம் கேட்டுப்பார் 1999. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை சூர்யா காதலித்து மணம்முடித்தார்.

2001 ஆம் ஆண்டில் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

2003 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன மற்றும் வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் சூர்யாவிற்கு பெற்று தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார் நம் சூர்யா.

இதனை தொடர்ந்து 51வது பிலிம் பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

இதன்பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் என இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். மேலும் 2004ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து எனும் அரசியல் கதைக்களம் கொண்ட திரைபடத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார்.கஜினியில் மறதி நோயாளியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் சூர்யாவிற்கு மிக பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது. 2006ஆம் ஆண்டு சில்லுனு ஒரு காதல், 2007 இல் வேல் போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

2008இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

2009 இல் கே.வி.அனந்த் இயக்கத்தில் அயன், கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ஆதவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் சி2 , சி3 ஆகியவை வெளியாகின.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பல மொழிகளில் உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பின் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார். இந்த ஒரு திரைப்படம் ஓப்பனிங் கொடுத்த அளவிற்கு வேறு எந்த ஒரு நடிகரின் படமும் இதுவரை ஆப்படி ஒரு ஓப்பனிங் பார்த்ததில்லை.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு பல அயிரம் ஏழை பிள்ளைகள் படிக்க வைத்து வரும் ஒரு நல்ல உள்ளம் படத்தை மாபெரும் மகா நடிகன் தான் சூர்யா சிவகுமார்.

இதன்பின் மீண்டும் கே. வீ. அனந்த் இயக்கத்தில் மாற்றான்னாய் இரு துருவங்களாக உருவெடுத்து, அஞ்சானில் மும்பை தாதாவாக பட்டையை கிளப்பி, மாசு என்கிற மாசிலாமணியாய் மாஸ் காட்டி, 24கில் நேரம் கடந்து செல்ல வைத்து,

தனக்கென்று ஒரு லட்ச கணக்கில் தானா சேர்ந்த கூட்டத்தை உருவாக்கி, அதன்பின் என்.ஜி.கேவாக அரசியலில் ஜெயித்து, காப்பணாக தற்போது களம் புகுந்து, பல ஆயிரம் ஏழை எழியோரை படிக்க வைத்து வரும் பலரின் அண்ணன் சூர்யா அவர்களுக்கு 45வது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறதில் சந்தோஷம் அடைகிறது உங்கள் தமிழ் ஸ்டார் .