தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகன் உள்ளான்.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தற்போது சூர்யாவின் மகள் தியா அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதோ அந்த விவரம்
1. தமிழ் – 95 மதிப்பெண்
2. ஆங்கிலம் – 99 மதிப்பெண்
3. கணிதம் – 100 மதிப்பெண்
4. அறிவியல் – 98 மதிப்பெண்
5. சமூக அறிவியல் – 95 மதிப்பெண்
இப்படி அனைத்து பாடத்தில் தொண்ணூற்றி ஐந்து மற்றும் அதற்கு மேலாகவே மார்க் எடுத்து உள்ளார் தியா என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இது உண்மையாகவே தியா அவர்களின் மாதிரிதான் என்று சூர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.