தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தனர்.
இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்க குழந்தையாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. தற்போது இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஜெயா சர்மாவின் தன்னுடைய வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இதுவரை நடிப்பு படிப்பு என மாறி மாறி இருந்து வந்த ஸ்ரேயா சர்மா தற்போது முழுநேர வழக்கறிஞராக மாறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.