Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புறநானூறு படம் குறித்து வெளியான ஷாக் தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்.

மேலும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல படங்களை தனது கைவசமாக வைத்துள்ள சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் புறநானூறு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் படம் தொடங்காமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு 2டி என்டர்டைன்மெனட் நிறுவனமும் விலகிக் கொள்ள புதிய நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமரன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து முடித்தவுடன் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya exit from purananooru movie
Suriya exit from purananooru movie