தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த சூர்யா கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு பட சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் சூர்யா புதிய பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளார். தெலுங்கு நடிகர்களைப் போல நடிகர் சூர்யா தமிழகத்தில் 5 திரையரங்குகளை லீசுக்கு எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அவருடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

suriya-in-new-bussiness-update