தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவர் நடிப்பில் காப்பான் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம்.
இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்ததாக அவர்களே தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் காப்பான் படத்தில் வெட்டுக்கிளி இந்தியாவில் வந்து எப்படி விவசாய நிலங்களை நாசமாக்குகின்றது என்பதை காட்டியிருப்பர்.
அது அப்படியே தற்போது இந்தியாவின் வட மாநிலத்தில் நடந்து வருகிறது.
அதோடு 7ம் அறிவு படத்தில் வைரஸ் சீனாவில் இருந்து வருவது போல் காட்டியிருந்தனர், தற்போது சீனாவில் இருந்து கொரொனா வந்துள்ளதாக மீம்ஸ் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.