தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அஜித் குமார், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் திநகரில் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.